சத்துணவு முட்டையில் ஊழல்! அமைப்பாளர் சஸ்பெண்டு!

சத்துணவு முட்டையில் ஊழல்! அமைப்பாளர் சஸ்பெண்டு!

 கு.அசோக்,

 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி அவர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வின் பொழுது கும்மி பேட்டை உயர்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவு முட்டையில் முறைகேடு நடப்பதையும்  மற்றும் அரிசி பருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிப்பில் குளறுபடி செய்த சத்துணவு அமைப்பாளரைஅதிரடியாக பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், செம்பேடு பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வின்போது கும்மினி பேட்டை ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தினை  மாவட்ட ஆட்சியர் தலைவர் வளர்மதி அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

 அப்போது மாணவ மாணவிகளுக்கு மதிய உணவோடு முட்டை வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து பொழுது வருகை பதிவேட்டில் 344 மாணவர்கள் எனபதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 210 முட்டைகள் மட்டுமே  முட்டை வழங்க தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

 அதிலும் 7 மாணவர்களுக்கு கடைசியில் முட்டை கிடைக்கவில்லை. இதனை பார்த்த பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் முட்டைகள் வைக்கப்பட்டிருந்த இருப்பு அறையில் உள்ள முட்டைகளை கணக்கெடுத்தார்கள்.

 அப்பொழுது அடுத்த இரண்டு நாட்களுக்கு மாணவ மாணவியர்களுக்கு தேவையான முட்டை அளவில் 382 முட்டைகள் மட்டுமே இருந்தது.

 முட்டைகள் குறைவாக இருந்ததற்கு காரணத்தை சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் கேட்ட பொழுது  வேறு ஒரு பள்ளியில் இறக்கி வைத்துள்ளார்கள் என தவறான தகவல்களை தெரிவித்தார்கள்.

   இதனைத் தொடர்ந்து முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவது மற்றும் இருப்பு குறித்து  பராமரிக்கப்படும் பதிவேடுகளை கேட்ட பொழுது அது முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கண்டறியப்பட்டது.

   பின்னர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேதநாயகம், சத்துணவு அமைப்பாளர் மலர்  முட்டை அரிசி பருப்பு, காய்கறிகள் இவற்றின் கணக்குகள் முறையாக பராமரிக்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

  எனவே அவர் பணி இடை நீக்கம்  செய்ய உத்தரவிடப்பட்டது.

  மேலும் இவர் பணி சேர்ந்த நாள் முதல் தற்பொழுது வரை பதிவேடுகளையும் ஆய்வு செய்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அதற்கான அபராத தொகையை கட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு சத்துணவு அமைப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய ஆணை வழங்க உத்தரவிட்டார்கள்.