கத்தி மிரட்டலுக்கு பயப்படாத பெண் காவலர்! தனி ஆளாக ரவுடிகளை விரட்டி காதலர்களை காப்பாற்றினார்!

கத்தி மிரட்டலுக்கு பயப்படாத பெண் காவலர்! தனி ஆளாக ரவுடிகளை விரட்டி காதலர்களை காப்பாற்றினார்!

ம.பா.கெஜராஜ்,

மெரினா பீச்சில் லவ்ஸ் செய்துக்கொண்டிருந்த ஜோடியை தாக்கி தவறாக நடக்க முயன்ற ரவுடி கும்பலை  பெண் காவலர் ஒருவர் தனி ஆளாக விரட்டி பிடித்துக் கொடுத்திருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு, 

 நேற்று மாலை மெரினா கடற்கரையில் ஒரு காதல் ஜோடி ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்துக் கொண்டிருந்தனர்.

 அப்போது அங்கு வந்த ஒரு ரவுடி, அந்த காதல் ஜோடியிடம் தகராறு செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணிடமும் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.

 ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல விடாத அந்த ரவுடி, தனது கூட்டாளிகள் இருவருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அங்கு ஏராளமானோர் இருந்த நிலையிலும் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.

 அப்படியிருக்க, மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலரான கலா தூரத்தில் இருந்து அங்கு ஏதோ பிரச்சினை நடப்பதை பார்த்து உடனடியாக அங்கு விரைந்தார்.

   அந்த ரவுடி கும்பலை மடக்கி அங்கிருந்து சென்றுவிடுமாறு எச்சரித்தா£ர். ஆனால், போதையில் இருந்த அந்த ரவடிகளோ, "உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படியே போய்விடு. இல்லையென்றால், நாங்கள் கத்தியை எடுக்க வேண்டியிருக்கும்" என மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு கொஞ்சமும் பயப்படாத காவலர் கலா, அவர்களை ரெண்டு சாத்து சாத்தினார்.

 பெண் காவலர் கலாவின் துணிச்சலை கண்டு மிரண்ட ரவுடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கலா அவர்களை துரத்தி சென்ற போதும் அவர்கள் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் பைக் எண்ணை குறித்து வைத்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

 புகார் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கலா கொடுத்த பைக் எண்ணை கொண்டு அந்த ரவுடி கும்பலை கைது செய்தனர். மேலும், துணிச்சலாக செயல்பட்ட காவலர் கலாவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் காவலர் கலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஒரு பெண்ணுக்கு இருந்த துணிச்சல் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆண்மகன்களுக்கு மிஸ்ஸிங்.