என்னது?! கபில்தேவை கடத்திட்டாங்களா?

என்னது?! கபில்தேவை கடத்திட்டாங்களா?

தெ.நெல்சன்,

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நாடு முழுக்க போட்டிகளை நடத்த பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

   இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரல் ஆனது. அதில் முன்னாள் கேப்டன் கவில்தேவை யாரோ கடத்துவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோ அமைந்து உள்ளது. அதன்படி கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட வீடியோ ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விளம்பரம் என்று தெரியவந்துள்ளது.

 வீடியோ எவ்வித தகவலும் வழங்காமல், கவுதம் கம்பீர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது விளம்பரம் என்று தெரியவந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.