வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? முதல்ல இதை செய்யுங்க! திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை!

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? முதல்ல இதை செய்யுங்க! திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை!

 ஆர்.ரமேஷ்,

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா முறையான பணி ஒப்பந்தம் என்ன பணி போன்ற விவரங்களை சரியாகவும் முழுமையாகவும் தெரிந்து கொண்டும்.

  தமிழ்நாடு அரசின் அயலகத் நலத்துறை அல்லது குடிப்பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டும், பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொண்டும் இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.

     இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

   மேலும் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண். 9042149222 மூலமாகவும் poechennai1@mea.gov.in,  poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி புரிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை செயல்பட்டு வருகிறது.

  வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்பு உதவி மையத்தின் எண்களை (18003093793, 8069009901, 8069009900) பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.