பப்பர...பப்பர என்று ஹாரன் அடிக்கும் பேருந்துகள்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவையில் ஓடும் பல பேருந்துகள் சத்தமான ஹாரன்களை பொறுத்திக் அதை இசைத்தபடி பறக்கிறார்கள், இதனால் பொதுமக்களுக்கு இடைஞ்சலும், விபத்தும் ஏற்படுகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி போட்டி போட்டுக் கொண்டு வந்த 2 தனியார் பேருந்துகள், ஒத்தக்கால்மண்டபம் அருகே ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு 9 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் - இது குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்,அன்னூர்,சூலூர்,திருப்பூர் இந்தப் பாதையில் செல்லும் தனியார் வாகனங்கள் மிகவும் அத்துமீறல் செய்து வருகிறார்கள் என்று கோவைவாசிகள் தெரிவிப்பதோடு அப்படிப்பட்டவர்கள் மீது ம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.