ஓ.பி.எஸ்.ஸை வச்சு செய்யும் ஓ.பிஎஸ். ஆமாங்க ராமநாதபுரத்தில் இரண்டு ஓ.பி.எஸ்!

ம.பா.கெஜராஜ்,
அங்கு இங்கு ஓடி மூச்சிரைத்து போன ஓ.பன்னீர்செல்வம், கெஞ்சி கூத்தாடி பா.ஜ.க.கூட்டணியில் சீட்டு பிடித்திருக்கிறார். ஆனாலும் அவர் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுகிறார். ஆகவே அவர் தேர்தல் விதிமுறைகள் படி ராமநாதபுரம் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகவே கணக்கில் உள்ளார்.
என்னதான் இருந்தாலும் ஓ.பி.எஸ். முன்னாள் முதல்வர் ஆச்சே... அதனால் ராமநாதபுரம் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
இருந்த போதும் இந்த சந்தோஷமும் அவருக்கு நீடிக்கவில்லை.
இப்படியான சூழலில் சுயேச்சையான ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட மற்றொரு சுயேச்சை வேட்பாளரான இன்னொரு ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனால் ஓபிஎஸ்ஸின் வாக்குகள் சிதறி புதிய வேட்பாளருக்கும் விழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெயர்கள் அருகருகே இருந்துவிட்டால் இன்னும் பெரிய சிக்கல் என்று ஓபிஎஸ் தரப்பு கருதுகிறதாம்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது விசுவாசிகள், இனியும் ஓபிஎஸ் அணியில் தொடர்ந்தால் நம்ம கதியும் அதோ கதிதான் என்று கழன்று வருகிறார்களாம். அந்த ரேசில் பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் முதலிடத்தில் உள்ளாராம்.