பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் தளபதியை போட்டுத்தள்ளிய ஐடிஎஃப்!

உ.சசிகுமார்,
ஆயிரம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் தீவிரவாத குழுவைச் சேர்ந்த தளபதி கொல்லப்பட்டான். இந்த தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு படையான ஐடிஎஃப் அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அகமது சியாம் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், இவர், 1,000 பேரைபிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய மூத்த தளபதிகளில் ஒருவரான அகமது சியாம் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர், ராண்டிசி மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்திருந்தார். காசா மக்கள் தெற்கு நோக்கி வெளியேற விடாமல் தடுத்ததில் அகமது சியாமுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், சுரங்கப் பாதையில் பயங்கரமான ஆயுதங்களையும் அவர் மறைத்து வைத்திருந்தார்.
ஹமாஸின் நாசர் ரத்வான் கம்பெனி படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் அகமது சியாம். காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வந்தஅகமது சியாமின் ரகசிய இருப்பிடம்குறித்து ஷின் பெட் மற்றும் ராணுவ புலனாய்வு இயக்குநரகம் அளித்த உளவு தகவல்களின் அடிப்படையில் கிவாடி பிரிகேட் படையினரின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளா£ என ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு படைஅகமது சியாம் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஹமாஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.