ரஜினிகாந்த் அளித்த வாகனத்தில் 2046 -வது சடலம்! சமூகசேவகரின் பாராட்டுக்குரிய செயல்!

கு.அசோக்,
திருவண்ணாமலை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் அனாதை சடலங்களை அடக்கம் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டதால் நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய வாகனம் மூலம் 2046 ஆவது உடலை இன்று வேலூரில் நல்லடக்கம் செய்தார்
வேலூர் மாவட்டம், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத ஆதரவற்ற (முகமது ரபீக் ) என்பவரின் சடலத்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் வேலூர் பாலாற்றங்கரையில் இன்று நல்லடக்கம் செய்தார்.
இவர் தொடர்ந்து மாநிலத்தில் பல மாவட்டங்களில் ஆதரவற்றோர் சடலங்களை எடுத்து சமூக சேவை நோக்கத்துடன் அடக்கம் செய்து வருகிறார்.
இவர் சமூக சேவையை அங்கிகரித்து நடிகர் ரஜினிகாந்த் இது போன்று அனாதை சடலங்களை கொண்டு சென்று அடக்கம் செய்ய உதவிகரமாக இருக்க வேன் ஒன்றை ஜுன் 22 ஆம் தேதி வழங்கினார்.
இந்த வேன் மூலம் இன்று 2046 ஆவது அனாதை சடலத்தை கொண்டு வந்து பாலாற்றங்கரையில் அடக்கம் செய்தார்