நறுவீ இல்ல திருமண விழா! நீதி அரசர்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் பங்கேற்பு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி. வி. சம்பத் மகன் நிதின் - அபிராமி திருமணம் சென்னையில் நடைபெற்றது, இதில் நீதியரசர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனின் பேரனும், வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.வி.சம்பத் - அனிதா சம்பத் தம்பதியர் மகனுமான நிதின் சம்பத்துக்கும், சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குனர் கே.டி.வெங்கடேசன் -லலிதா தம்பதியரின் மகள் அபிராமிக்கும் நேற்று 5 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மகாலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும், மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் தமிழக அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு,க. பொன்முடி,மா.சுப்பிரமணியன்,சேகர் பாபு,டி.ஆர்.ரகுபதி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி,ஆர். காந்தி, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் ம.தி.மு.க பொது செயலாளர் வை.கோ. தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன்,தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த், துரை வை.கோ முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, அசோகன், ப.கார்த்திகேயன்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஷ் லட்சுமி நாராயணன், முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன், அபூர்வ வர்மா, மணிவாசகர், கணேசன், சங்கர், கிரண் குரான, குமரவேல் பாண்டியன், பொன்னையா, தேவந்திரநாத் சாரங்கி, காவல் துறை டி.ஜி.பி.க்கள் சங்கர் ஜூவால், சீமா அகர்வால், அபயங் குமார்,டேவிட்சன் ஆசிர்வாதம், ஐ.ஜி.க்கள் சுதாகர், கண்ணன், அன்பு. முன்னாள் டி.ஜி.பி.க்கள் ராதாகிருஷ்ணன், ஜாபர் சேட், ஏ.கே.விஸ்வநாதன், எஸ்.ஆர்.ஜாங்கிட் ஆகியோர் வருகை தந்தனர்.
மேலும், பத்திரிகையாளர்கள் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்ரமணிய ஆதித்தன், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர். ரமேஷ், தினமலர் ஆசிரியர் ஆதிமூலம், தொழில் அதிபர்கள் சபரீசன், சேகர் ரெட்டி,பண்ணாரி சுகர்ஸ் பாலசுப்ரமணியன்,வைகுண்ட ராஜன், ஜிப்ராஸ் கட்டுமான நிறுவனம் சுப்பா ரெட்டி, பாஷியம் குரூப் பாஷியம் மற்றும் அபினேஷ், எம்.ஜி.எம். ராஜகோபால், பிரசாந்த்.
கல்வியாளர்கள் ஹென்றி போர்ட் மருத்துவ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்காட், ராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் வெங்கடாச்சலம், வேல்ஸ் பல்கலைக்கழகம் வேந்தர் ஐசரி கணேஷ், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வேந்தர் ஏ.சி.சண்முகம், கலுசலிங்கம் பல்கலைக்கழகம் வேந்தர் ஸ்ரீதர்,எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இணை வேந்தர் ரவி பச்சமுத்து, அபேக்ஸ் லெபாராட்ரிஷ் வணங்காமுடி மற்றும் இரு திருமண வீட்டு உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தவர்களை நறுவீ மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி. வி. சம்பத் - அனிதா சம்பத் தம்பதியினர், அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குனர்கள் கே.டி.வெங்கடேசன் -லலிதா தம்பதியினர், கே.டி.சீனிவாசராஜா-ஆனந்தி தம்பதியினர் வரவேற்றனர்.