சட்ட பேரவையில் ஆன்லைன் ரம்மி ஆடிய எம்.எல்.ஏ.!

ஜார்ஜ்.ரவி,
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.
அந்த பெருமகனார்களின் பெயர்கள் எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி, ஆகும். மஹோபா மற்றும் ஜான்சி தொகுதியைச் சேர்ந்த இவர்கள் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள் என்று கமென்ட் அடித்துள்ளார்கள்.